வெள்ளி, 7 ஏப்ரல், 2017

டாஸ்மாக் நிலை

புத்தி தெளிந்துவிட்டது
திருந்திவிட்டோம்.

வழிபோக்கர்களை
பயமுறுத்தும்படி
தடுமாறி நடக்கமாட்டோம்.

நா கூசும்படி
நா கூசும் வார்த்தைகளை
உச்சரிக்க மாட்டோம்.

சாக்கடை ஓரமோ
குப்பைமேட்டிலோ
உடைவிலகி உணர்ச்சியற்று
படுத்திருக்கமாட்டோம்.

நல்ல மனிதராகவே
நடந்துகொள்ளுகிறோம்..

ஊருக்குள்
டாஸ்மாக் கடை நடத்த
இடம் தாருங்கள்.

கேள்வி

சாம்பாரில்
உப்பின் அளவு சரியா
என்பதை
பரிமாறுகையில் கேட்டால் பராவாயில்லை.
ஊட்டி விடுகையிலா
கேட்பது.

பதிவு

நம் சந்திப்புகளில்,
பேச முடியாத தருணங்களில்
உன்
மெல்ல சிரித்தலை பதிவுசெய்.
நான்
அர்த்தப்படுத்திக்கொள்ள கொள்கிறேன்.

அன்பு

#அன்பு கவிதை
"""""""""""""""""""""""""

பாதுகாப்பு கருதி
கடவுச்சொல்லை
மாற்றச் சொல்கிறது கணிணி.

இதைவிட அழகான
மற்றுமொரு பெயர் இருக்கிறதா
உனக்கு?

கேள்வி

சாம்பாரில்
உப்பின் அளவு சரியா
என்பதை
பரிமாறுகையில் கேட்டால் பராவாயில்லை.
ஊட்டி விடுகையிலா
கேட்பது.